ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நடந்து கொண்டே  ரசிக்கலாம்!

எத்தனையோ பூங்காக்கள் தமிழகத்தில் இருந்தாலும், அவை எல்லாம் நம் உணர்வோடு ஒன்றிவிடுவதில்லை.

News image
Updated On :17 நவம்பர் 2013, 3:21 am

எத்தனையோ பூங்காக்கள் தமிழகத்தில் இருந்தாலும், அவை எல்லாம் நம் உணர்வோடு ஒன்றிவிடுவதில்லை. அவற்றில் எல்லாம் சில நிமிடங்கள் மட்டுமே நாம் இருப்போம். பிறகு வந்துவிடுவோம். ஆனால் ஒரு நாள் முழுவதும் பூங்காவில் இருந்தாலும், கொஞ்சம் கூட அலுப்பூட்டாத பூங்கா ஒன்று உள்ளது. அது குற்றாலத்தில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்கா.
 குற்றாலம் என்றாலே அருவிகள்தாம் எல்லாருடைய நினைவிலும் உடனே தோன்றும். ஆனால் வருங்காலத்தில் அருவிகளோடு இந்தப் பூங்காவும் நம் மனதில் இடம் பிடிக்கப் போகிறது.
 இப்போதெல்லாம் பெரும்பாலான பூங்காக்களில் மரம், புல், செடிகள், வண்ணப்பூக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதற்குப் பதிலாக ஹோட்டல், மால் போன்ற வர்த்தக நிறுவனங்களை அங்கே நிறுவி அதன் மூலம் வருமானத்தை அதிகப்படுத்துகிறார்கள். குழந்தைகளுடன் பூங்காவுக்குச் செல்பவர்கள் நிறைய செலவு செய்துவிட்டு, பூங்காவை ரசிக்க முடியாமல் வெளியே வருவது வாடிக்கையான விஷயம்.
 ரூ. 5 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சுற்றுச்சூழல் பூங்காவில் பணச்செலவு எதுவுமில்லை. நிம்மதியாக இயற்கையை ரசிக்கலாம்.
 குற்றாலம் ஐந்தருவியிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணையின் பராமரிப்பில் 37 ஏக்கர் பரப்பளவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முதன்மை நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு அம்சங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு
 வருகின்றன.
 சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்கம், செயற்கை நீர் வீழ்ச்சி, கற்சிலைகள், சிமெண்ட் கலவையால் உருவாக்கப்பட்ட சிலைகள் எனப் பல விஷயங்கள் இங்குண்டு. குற்றால அருவியை நடந்து கொண்டே பார்ப்பதற்கு வசதியாக மரத்தாலான நடைபாதை இங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
 மேலும் இப்பூங்காவில் எங்கு பார்த்தாலும், கண்ணுக்கெட்டும் தூரம் வரை அழகிய மரங்கள், செடிகள், கொடிகள், வண்ணமிகு பூக்கள் என பூங்காவே பச்சைப் போர்வையுடன் காட்சியளிப்பது சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரையும் ஈர்க்கும்.
 பூங்கா முழுமையும் சுற்றிவர சிறப்பான நடைபாதை வசதியுள்ள இங்கு காலையில் நுழைந்தால் மாலை வரை நடந்து கொண்டே இயற்கையை ரசிக்கலாம்.
 இளைஞர்களுக்காக சாகச விளையாட்டுத் திடல்களும் இங்குள்ளன. தென்காசி, குற்றாலம் போன்ற பகுதிகளிலுள்ள கோவில் கோபுரங்களை இங்கிருந்தே பார்ப்பதற்கு வசதியாக பார்வையாளர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் இப்பூங்காவைச் சிரமமின்றி சுற்றிப்பார்த்து
 ரசிக்கலாம்.
 இங்குள்ள பெரணித் தோட்டம், மூங்கில் தோட்டம், ரோஜாத்தோட்டம், தாமரை,அல்லிப்பூத் தோட்டம்,மூலிகைத் தோட்டம், வாசனைப் பூக்கள் தோட்டம், கல் தோட்டம், இயற்கை அருவித் தோட்டம் போன்ற பல்வகையான தோட்டங்கள் பார்ப்பவர் கண்ணுக்கு நிச்சயம் விருந்தளிக்கும்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.